+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – தேர்வு பணி மிக அவசரம்

அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பின் வரும் பாடங்களில் உள்ள அனைத்து பாட ஆசிரியர்களையும் 12-07-2018 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து முகாம் பணியினை மேற்கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் சார்ந்த பாட ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்படாத தலைமைஆசிரியர்கள் (13-07-2018) நாளை காலை 10.00 மணிக்கு உரிய காரணத்தினை எழுத்து மூலமாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அரசு / நகரவை / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்