12.06.2019 அன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை (இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) பள்ளி‘ காலை இறைவணக்க கூட்டத்தில் எடுத்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மாவட்ட ஆட்சித்தலைவரை  தலைவராக கொண்டு செயல்பட்டுவரும் சைல்டு லைன் 1098 என்ற திட்டம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை உறுதி செய்யும் வண்ணம்  செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் 12.06.2019 அன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும்  சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை (இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) பள்ளி‘ காலை இறைவணக்க கூட்டத்தில் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின வாரமாக (ஒரு வாரம்) அனுசரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வினை தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் “அன்பு கடிதம்” அளித்தல், சைல்டுலைன் விழிப்புணர்வு சுவரொட்டிகள் நிகழ்வுடன் குழந்தைகளின் உரிமைகளை எடுத்துரைத்தல் போன்ற நிகழ்வுகளுடன் “மாற்றம் தந்த குழந்தைகள்” ஊக்குவிப்பு நிகழ்வு, மாணவர்கள் பேரணி ஆகியவற்றை நடத்தி velloreceo@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு புகைப்படங்களை பகிரும்படி அனைத்து தலைமையாசிரியக்ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE THE PLEDGE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்