10.10.2019 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்  70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல்

சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில்) 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும்)

10.10.2019 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்  70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டத்தில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்