வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக்கல்வி அலுவலர்கள், வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி  அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரக்கல்வி அலுவலர்கள், சார்ந்த ஒன்றித்தில் ஆணைகளை வழங்கிவிட்டு ஒப்புகைச்சீட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேர்தல் பணிக்கான ஆணையினை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ இயலாது எனவே, அனைத்துவகை  ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களுக்கு முன்பாவே சென்று பயிற்சி முடியும்வரை மையத்தில் இருக்கவும் தெரிவிக்கப்படுகிறது. இதில், ஏதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆணைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி மையத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்