நினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்

/நினைவூட்டு/

அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தேர்வு மைய முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் இணைத்து தைத்து முதன்மை விடைத்தாட்களுடன் அந்தந்த பாடத்திற்குரிய  ஆசிரியர்கள் உடனிருந்து தங்கள் பாடம் சார்ந்த முகப்புத்தட்கள் 24.02.2020க்குள் இனைக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் 26.02.2020 அன்று காலை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளரிடம்  ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு

மேல்நிலை பொதுத்தேர்வு 2020 முகப்புத்தாள் , விடைத்தாள்

+1 & +2 – Topsheet details

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தேர்வு மைய முதல்வர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.