மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018 – CEs/SOs/AEs நியமனம்

மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018

வேலூர் மாவட்டத்தில் 1) டோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர், 2) N.K.M மேல்நிலைப்பள்ளி, சாயிநாதபுரம், வேலூர், 3) ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஆற்காடு ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு, பொருளியல், வணிகக்கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் உயிரியல் தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  உதவித்தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி 12.04.2018 முதல் நடைபெறவுள்ளது.

அதேபோல் தொழிற்கல்வி பாடங்கள்,  Rare Languages, Rare Subjects ஆகிய பாடங்களுக்கான உதவி தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி  17.04.2018 முதல் நடைபெறவுள்ளது.

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின்  அனைத்து முதுகலை பாட ஆசிரியர்களையும் மேற்கண்ட நாட்களில் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள ஏதுவாக இணைப்பில் கண்ட  படிவத்தில் (ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும்) தனித்தனியாக  சார்ந்த விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு உதவித்தேர்வாளர்களை (AEs) விடுவிப்பு செய்து விடுவிப்பாணை அளித்தனுப்புமாறு அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : CEs, SOs விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் 11.04.2018 அன்று காலை 9.00 முதல்நடைபெறும். சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தங்கள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் தொலைபேசி வழியாக செய்தி அனுப்பப்படும்.

அதேபோல் தொழிற்கல்வி பாடங்கள்,  Rare Languages, Rare Subjects ஆகிய பாடங்களுக்கான CEs, SOs  விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் 16.04.2018 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும்.

CLICK HERE TO DOWNLOAD THE RELIEVING FORM

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF GOVT &AIDED SCHOOLS CAMPWISE & SUBJECTWISE PG TEACHERS

CLICK HERE TO DOWNNLOAD THE MATRIC  SCHOOL  PGs LIST FOR DOMNIC SAVIO HSS TIRUPATTUR VALUATION CENTRE

CLICK HERE TO DOWNLOAD MATRIC SCHOOL PGs LIST FOR NKM HSS, SAINATHAPURAM, VELLORE -VALUATIONCAMP

CLICK HERE TO DOWLOAD THE MATRIC SCHOOL PGs LIST FOR SRI RAMAKRISHNA MHSS,ARCOT -VALUATIONCAMP

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்