மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்கள ( +1 arrear subject) தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று  காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் www.peps.tn.nic.in  மற்றும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

இணைப்பு

HSE March 2019 Exam TML Distribution for Schools H1

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.