மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 23.06.2020 மதியம் 1.00 மணி நிலவரப்படி மாணவர்கள் வங்கி கணக்கு விவரங்கள்  EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்