மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு மற்றும அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்யபடாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க கூடிய செயலாகும். இதனால் சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு உரிய நேரத்தில் அறிக்கை தொகுத்தனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி உடன் பதிவேற்றம் செய்யுமாறும், காலதாமதத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிகளின் பெயர்பட்டியல்

  1. அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
  2. நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம்
  3. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டை
  4. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம்
  5. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்னை
  6. வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
  7. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இலத்தேரி
  8. தோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
  9. மேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
  10. கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர்
  11. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குருவராஜபேட்டை
  12. அரசு மேல்நிலைப்பள்ளி, சயனபுரம்
  13. அரசு மேல்நிலைப்பள்ளி, மாதனூர்
  14. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை
  15. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
  16. அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி
  17. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
  18. அரசு மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை
  19. அரசு மேல்நிலைப்பள்ளி, தாசிரியப்பனூர்
  20. அரசு மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் ஆர். எஸ்
  21. அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னப்பள்ளிக்குப்பம்

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்