மிக மிக அவசரம் – அனைத்து அரசு/நகராட்சி நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் – பகுதி நேர ஆசிரியர்கள் – மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் 30.04.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்