ஈஷா பசுமைப்பள்ளி இயக்கம் சார்பாக மரக்கண்றுகள் வழங்கும் தொடக்க விழா 10-12-2019 அன்று காலை 9.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேலூர், ஊரீஸ் கல்லூரி காப் ஹால் அரங்கில் நடை பெறுதல்

சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் ஈஷா பசுமை பள்ளி இயக்கமும் இணைந்து 136 அரசு/அரசு உதவி பெறும் உயர் நிலை /மேல்நிலை பள்ளிகளில் மரக்கன்றுகளை உருவாக்கி வருகின்றது  ஒவ்வொரு பள்ளியிலும் 2200 மரக்கன்றுகளை நன்கு வளர்த்து பராமரித்து வருகின்றனர் மாணவர்களால் வளர்க்கப்பட்ட இந்த மரக்கன்றுகளை வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா 10-12-2019 அன்று காலை 9.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் வேலூர், ஊரீஸ் கல்லூரி காப் ஹால் அரங்கில்  நடை பெற உள்ளதால்  தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தை சார்ந்த ஆசிரியர் மற்றும் 1 மாணவர் கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது  இத்திட்டத்தில் பங்கு பெற்றுள்ள 136 அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆசிரியர் தங்கள் பள்ளி  சார்ந்த  மாணவரை பாதுகாப்புடன் அழைத்துவரும்படி அறிவுறுத்தப்படுகிறார்.

இடம் : காப்ஹால் கூட்ட அரங்கம், ஊரீஸ் கல்லூரி, வேலூர்.

நாள் : 10-12-2019

நேரம் : காலை 93.0 மணி முதல் 1 மணி வரை

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.