மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேற்காண் பாட நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்களின் வசதிக்காக, முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள் அனைத்தும் மறுநாள் Kalvi TV-ன் அதிகாரப்பூர்வமான You Tube channel-ல் kalvitvofficial.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கோள்ளும்படி அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.