பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் பணி சார்பாக தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான அறிவுரைகள்

/தேர்தல் தனிகவனம்/                                                                                                          /அவசரம்/

அறிவுரைகள்

  1. தேர்தல் சார்பாக வரும் 04.08.2019 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 9.30 மணிக்கு   நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள  ஏதுவாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை விடுவித்து அனுப்ப தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

  1. தேர்தல் பணி ஆணை பெறப்பட்ட அனைத்து பணியாளர்களும் எக்காரணம் கொண்டும் தேர்தல் பணியினை தவிர்க்க கூடாது, மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

 

  1. தேர்தல் பணி ஆணை பெறப்பட்டு வாக்கு சாவடி ஒதுக்கப்படாத பணியாளர்கள் (Reserve) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  மண்டல அலுவலரின் அனுமதியின்றி   எக்காரணத்தை கொண்டும் வெளியேற கூடாது,

 

  1. தேர்தல் நடத்தை விதிகள் கையேட்டில் (HANDBOOK) தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவ்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் பணியினை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில்   பணிபுரியும்  பணியாளர்கள் எவ்வித புகாருக்கு இடமளிக்காமல்  பணியினை  செவ்வன  செய்திட வேண்டும்.

 

  1. தேர்தல் பணியின் ஆணை பெற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களுக்கு செல்லமாமல் தேர்தல் பணியினை மேற்கொள்ளாத பணியாளர்களை எக்காரணம் கொண்டும் வரும் 06.08.2019 அன்று பள்ளியில்  மாவட்ட தேர்தல் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களின் அனுமதியின்றி பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.