பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2020-2021ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்- இணைப்பில் உள்ள பள்ளிகள்(25.09.2020 அன்று பதிவு செய்தவர்கள் தவர்த்து) NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பான முகாம் காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் ( SSA OFFICE) 26.09.2020 மற்றும் 28.09.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 9.00 முதல் நடைபெறுதல்.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2020-2021ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்-

25.09.2020 அன்றைய முகாமிற்கு வருகை புரியாத பள்ளிகள் NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பான முகாம்  காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் ( SSA OFFICE)  26.09.2020 மற்றும் 28.09.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 9.00 முதல் நடைபெறவுள்ளது.

தலைமையாசிரியர் அல்லது தலைமையாசிரியரால் நியமனம் செய்யப்படும் ஒரு பொறுப்பாசிரியர் SCHOOL NODAL ) ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்பட நகல்கள் மற்றும் பள்ளி முத்திரையுடன் காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்திற்கு ( SSA OFFICE)க்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வுதவித் தொகை திட்டத்தில் பயன்பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்யவும், தவறும்பட்சத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.