அனைத்து மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்/தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் புதிதாக துவங்கிய மெட்ரிக்/நர்சரி பள்ளிகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் மெட்ரிக்/நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இதுவரை தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிற்கு ஆஜராகாத பள்ளிகள் விவரம் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 15-09-2020 அன்று மாலைக்குள் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 2019-2020ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020-2021,2021-2022 மற்றும் 2022-2023 நிதயாண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய கருத்துருவினை 25.09.2020க்குள் “tnfeecommittee.com” என்ற கட்டண நிர்ணயக்குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட சார்ந்த மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் / தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.