வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வழங்குதல் 2-ம் ஆண்டு தொடக்க விழா – ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக மதிப்பு மிகு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சமூக ஆர்வலர், நடிகர் திரு.விவேக் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும், கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட இணைப்பில் உள்ள 35 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்திலேயே தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சி நடைபெறும் இடம் – ஊரீஸ் கல்லூரி, வேலூர்

பயிற்சி நாள் – 13.06.2019

நேரம் – காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS (35 HSS)

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.