மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்தல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை  இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வில் பயன்படுத்தப்பட வேண்டிய படிவங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பூர்த்தி செய்து  04-02-2019 முதல் 13-02-2019 தேதிக்குள் ( இரண்டாமாண்டு சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள்)  காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முதலாமாண்டிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் 16-02-2019 முதல் 23-02-2019 தேதிக்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறும்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பு

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

PRA SECOND YEAR 2019 FORMS

PRA FIRST YEAR 2019 forms

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.