மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சேவை மையம் மூலம் பெறுதல் சார்பு

நடைபெறவுள்ள மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் 27-12-2018 பிற்பகல் முதல் 05-01-2019 வரை வரவேற்க்கப்படுகிறது.

இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையமாக செயல்படும் பள்ளிகளுக்கு உரிய  ஆவணத்துடன் சென்று பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேவை மைய பள்ளிகள் விவரம் கீழ்வருமாறு

NODAL SCHOOL

செய்திக்குறிப்பு

march 2019 – pvt candidates application(1)

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

தலைமைஆசிரியர்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.