மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

வேலுர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த மேல்நிலை  இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பான மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் மதிப்பீட்டு பணிக்கு வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை இன்று (20-06-2019) 01.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு வேலுர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலுர்  தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.