மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

1. தங்கள் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளி தலைமை ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

2. செய்முறைத்  தேர்வுகள் நடைபெறும் பள்ளியில் புறத்தேர்வாளர்கள் முன்னிலையில் செய்முறைத் தேர்வு நடைபெறவேண்டும்.

3. செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று  குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகளை துவங்கி  குறிப்பிட்டுள்ள நேரத்தில் தேர்வுகளை முடிக்கப்படல் வேண்டும்.

4. செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரத்தினை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும்.

5. செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கட்டுக்களை உரிய நேரத்திற்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்