மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம்

1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர்

2. தக்கோலம் மகளிர்

3. ஒடுக்கத்துர் மகளிர்

4. பேராம்பட்டு

5. நேஷனல் மேல்நிலைப் பள்ளி குடியாத்தம்

6. இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி

 

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்.