மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (16.05.2018) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது- தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (16.05.2018) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. தங்கள் பள்ளியின் தேர்வு முடிவுகளை ஏற்கனவே தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள USER ID & PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து மாணவர்கள்   தேர்வு  முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்புப்பலகையில் ஒட்டிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எக்காரணத்தைக்கொண்டும் மாணவர்களின் தரவரிசை அறிவிப்பதையோ, எழுதுவதையோ மற்றும் மாணவர்களின் புகைப்படத்தை FLEX BANNER வைப்பதோ அல்லது பத்திரிக்கை/ ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதையோ மேற்கோள்ளக்கூடாது

தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளியில் இருந்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும், எந்தவிதமான புகார்களுக்கும் இடமின்றி செயல்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது. அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட தேர்வு முடிவுகளின் புகைப்படத்தை பின்வரும் அலுவலக Whatsapp எண்ணில் அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Whatsapp No.9385202022 அல்லது 9385202009