மேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,

 

2018 மார்ச்/ஏப்ரல்  மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16.07.2018 அன்று காலை 10.00மணி முதல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

                   பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வர் மைய தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்விஅலுவலகத்தில் நாளை 14.07.2018 அன்று தங்கள் பள்ளி மாணாக்கர்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்