மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு Arrear மற்றும் இரண்டாமாண்டு  தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாட்களை 08-05-2019 அன்று scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்திபின் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு எதேனும் விண்ணப்பிக்க வேண்டியிருப்பின் உரிய விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத்துடன் முதன்மைக் கல்வி அலுவலத்தில் அணுகுமாறும் இத்தகவலினை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்று செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

RV RT _Scripts downloading_ – press release

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.