மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019- செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை உடன் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் முடிவுற்றவுடன் அன்றே அல்லது மறுநாள் காலை 11.00 மணிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் இதர ஆவணங்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உரிய நேரத்திற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். தாங்கள் ஒப்படைக்கும் மதிப்பெண் பட்டியல்கள் உடனுக்குடன் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவுள்ளதால் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.