மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வு முடிவுகள் 08-05-2019 அன்று காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் பெறப்பட்டபின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிபதற்காக 10-05-2019 பிற்பகல் முதல் 13-05-2019 வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக)  தேர்வு எழுதிய மையம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டகடிதம் மற்றும் செய்திக்குறிப்பு   இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பு

+1 result release

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.