மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத் தாள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் முகப்புத்தாள் சரியாக உள்ளனவா என உறுதி செய்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று தற்போது வரை முகப்புத்தாள் பெறப்படவில்லை எனில் அதன் முழு விவரத்தினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் சார்ந்த பெயர் பட்டியலின் நகலில் முகப்புத்தாள் பெறப்படாத மாணவனின் பதிவு என்னை சிகப்பு  மையால் குறிப்பிட்டு உடன் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.