நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (09.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  இன்று (09.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS SCHOOL LIST 2017 – 2018

CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS SCHOOL LIST 2018 – 2019

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.