ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம் SSA காட்பாடி

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 03-06-2019 அன்று மதியம் 02.00 மணிக்கு  வேலூர்  மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 பணி ஒதுக்கீடு சார்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பு

PG-AND-BT-NAME-LIST(1)

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

சார்ந்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

(தலைமை ஆசிரியர் வழியாக)

நகல்

1. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

2. மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.